நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆப., அவர்கள்
குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து,
காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
******
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள்.
மேலும், சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்தம் வாரிசுதாரர்களுக்கு கதர் ஆடை அணிவித்து சிறப்பு செய்து, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக் குழுவினர்கள் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
மேலும் காவல்துறையை சேர்ந்த 42 காவல்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களையும், 34 காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 287 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பள்ளிக்கல்வித்துறை சார்பாக 4 முன்னாள் மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மூலம் சென்னையில் 24 தலைமையாசிரியர்கள் / விடுதி காப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு
ரூ.1.17 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு துறை சார்பில்
2 பயனாளிகளுக்கு ரூ18.00 இலட்சம் நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.02 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.17.41 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்
3 பயனாளிகளுக்கு ரூ.2.33 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5,580/- மதிப்பில் நலத்திட்ட உதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.25,104/-மதிப்பில் நலத்திட்ட உதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்
2 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.45.70 இலட்சம் நலத்திட்ட உதவிகள், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.87.45 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
குடியரசு தின விழாவில் 6 பள்ளிகளை சேர்ந்த 634 மாணவ, மாணவியர்களின் நாட்டுப்புற கலைகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறும் வகையில், தப்பாட்டம், பொய்கால், சிலம்ப ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் (நாமக்கல்) திரு.மா.க.சரவணன், திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.பி.முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.த.மாதவன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) திருமதி க.பிரபா, உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலன் திரு.எம்.விஜயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், வட்டாட்சியர்கள், அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர், நாட்டுப்புறக்கலைஞர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்