அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு.
நாமக்கல் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.01.2024) கள ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். இத்திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தாளம்படி ஊராட்சி சமுதாய கூடத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் இன்று (31.01.2024) ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படகூடிய ஆய்வு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, காலை 9.00 மணி முதல் நாமக்கல் வட்டத்தில் தங்கி, பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம், தாளம்பாடி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் குடிநீர், மின்வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் இருப்பு, குழந்தைகளின் வருகை, குழந்தைகளன் உயரம், எடை, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தாளம்பாடி அரசு துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளின் விவரங்கள் உள்ளிட்டவைகளை விரிவாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், கலந்துரையாடிய போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் தங்களின் வங்கி கணக்கில் சரியாக வரவு வைக்கப்படுகிறதா என கேட்டறிந்து, தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து அத்திட்டத்தின் கீழ் அனைவரும் பயன்பெற வேண்டும் என மகளிரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் தினசரி வருகை, கற்றல் திறன், கற்ப்பிக்கும் முறை, தேர்ச்சி சதவீதம், ஆசிரியர்களின் பணியிடங்கள், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வட்டாரத்தில் செயல்பட்டு வரும் மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, பள்ளியில் பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பரமாரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன் பெற்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை கேட்டறிந்து, மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, செல்லப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நாமக்கல் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கடைகளில் விற்கப்படும் குளிர்பானம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஆய்வு கூட்டம் நடைபெறும் நாமக்கல் நகராட்சி அலுவலகத்திற்கு மகளிருக்கான கட்டணமில்லா பயண சலுகை பேருந்தில் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயணிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பயணம் மேற்கொண்டார். பேருந்து பயணிகளுடன் கலந்துரையாடி அவர்களிடம் பேருந்து சரியான நேரத்தில் வந்து செல்கிறதா என்றும், மகளிருக்கான கட்டணமில்லா சலுகை பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
0 கருத்துகள்