நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பள்ளிபாளையத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.01.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொக்கராயன்பேட்டை காவிரி ஆற்றங்கரையில் படித்துறை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பள்ளிபாளையம் நகராட்சி வார்டு எண்.4 நாட்டாகவுண்டன்புதூர் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்,
ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், சமயசங்கிலி பகுதியில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழு நீள கரும்பு வழங்கப்படுவதையொட்டி, கொள்முதல் செய்வதற்கு கரும்பு தேர்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, இணைபதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திரு.க.பா.அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் திரு.எஸ்.துரைசாமி, பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் திருமதி மு.தாமரை, பொறியாளர் திருமதி எ.வி.ரேணுகா, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.டேவிட் அமல்ராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனார்.
0 கருத்துகள்