மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
இராசிபுரம்;ஜன,27_
மங்களபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1500 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு லைட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் வாழப்பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்தும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கான நீலம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் , அகலம் தாண்டுதல் முதலிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன ,இதில், மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் எஸ் .வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா முருகப்பன், பள்ளி மேலாண்மை குழு சரவணன், அருள், மங்களபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் முருகன், செந்தில்குமார் ,கந்தசாமி, கமலேஷ் ,தங்கதுரை, மற்றும் ஏராளமான பள்ளி குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்