நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் 27.10.2023 முதல் 09.12.2023 வரை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படிவம் 6 (சேர்த்தல்), படிவம்-7 (நீக்கல்), படிவம்- 8 (திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்) படிவங்கள் விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.01.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
இப்பட்டியல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதிவாக்காளர் பட்டியலின்படி கீழ்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளார்கள்.
சட்டப்பேரவை தொகுதி
பாகங்களின் எண்ணிக்கை
வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை
27.10.2023 வாக்காளர்பட்டியல் – வாக்காளர்களின் விபரம்
புதியதாகசேர்க்கப்பட்ட வாக்காளர்கள்விபரம்
நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் விபரம்
27.10.2023 அன்று நிகர வாக்காளர்கள்
ஆண்
பெண்
மற்றவர்கள்
மொத்த வாக்காளர்கள்
92 இராசிபுரம் (SC)
261
113
226331
5320
20624
111751
117829
7
229587
93 சேந்தமங்கலம்(ST)
284
122
241259
4170
2982
118251
124170
26
242447
94 நாமக்கல்
289
138
253304
4995
2122
123290
132838
49
256177
95 பரமத்திவேலூர்
254
128
218575
3901
3212
104906
114352
6
219264
96 திருச்செங்கோடு
261
114
226913
4438
2208
111074
118021
48
229143
97 குமாரபாளையம்
279
72
253261
6068
3640
124456
131173
60
255689
மொத்தம்
1628
687
1419643
28892
16228
693728
738383
196
1432307
27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவுவாக்காளர் பட்டியலில் இருந்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,19,643 ஆகும். தற்போது, இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர்பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,892. தல விசாரணை செய்து நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,228 ஆகும். அதன்படி 22.01.2024 அன்று நிகர வாக்காளர்கள் எண்ணிக்கை 14,32,307 ஆகும். மேலும், வாக்காளர்பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகம் மூலமாக வழங்கப்படும்.
இந்த இறுதி வாக்காளர்பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் 2024-க்கான தொடர் திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது. இத்தொடர் திருத்தப்பணியின் போது, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும், 17 வயது பூர்த்தியடைந்தவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடையும் காலாண்டில் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
தவிரவும், இதுவரை வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்துக் கொள்ளாதவர்களும், திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் / நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அளிக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு. திருமுருகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சினர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்