Hot Posts

6/recent/ticker-posts

பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் ஜனவரி 3 

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ,உள்ளூர் கோவில் திருவிழாக்கள் தற்போது நடைபெற்று வருகிறது .மேலும் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், பொங்கல் பண்டிகை சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.. இந்நிலையில் பள்ளிபாளையத்தில் பேப்பர் மில் சாலை மற்றும் பெரிய காடு, வெடியரசம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தற்போது கோவில் உள்ளூர் திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அதிகளவு பாக்கு மட்டை தட்டுகள் தேவைப்படும் என்பதாலும்,பொங்கல் பண்டிகைகக்கு தேவைப்படும் என்பதாலும் ,தற்போது பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் பணியை தொழிலாளர்கள் தீவிரப் படுத்தி உள்ளனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்