Hot Posts

6/recent/ticker-posts

விடுதலைப் போராட்ட வீரர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. ராமசாமி நூற்றாண்டு துவக்க விழா*

*விடுதலைப் போராட்ட வீரர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. ராமசாமி நூற்றாண்டு துவக்க விழா*

ஜனவரி.8

திருச்செங்கோட்டில் மூதறிஞர் ராஜாஜி நடத்தி வந்த காந்தி ஆசிரம மாணவரும் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலைப் போராட்ட வீரரும் தொழிலாளர்கள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தன் வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான மோ ளிப்பள்ளி வி ராமசாமி அவர்களின் நூற்றாண்டு துவக்க விழா அவர் பிறந்த தினமான 8.1.2024 இன்று நாமக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார் மூத்த தலைவர் பி. செங்கோடன் கொடியேற்றி வைத்தார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் தமிழ்மணி மாவட்ட குழு உறுப்பினர் பி தங்கராஜ் ஆகியோர்கள் நினைவு மரக்கன்றுகளை அலுவலகத்தில் மட்டும் பங்கெடுத்துக் கொண்ட பொதுமக்களுக்கும் வழங்கினார்கள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். அசோகன் ந. வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. தங்கமணி பி. ஜெயமணி மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி. செல்வராசு ஆர். அலமேலு எம்.ஆர் முருகேசன் பி.ராணி ஆர்.தேவராஜ் கு. சிவராஜ் மற்றும் சி. ரங்கசாமி பி.ராமசாமி ஆர்.நாகேஷ் செங்கோட்டையன் தங்கராஜ் நிசார் அகமது ஜெகநாதன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்