Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

                              
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் முன்னேற்பாடு பணிகளை  
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், அமணி கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (27.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.இராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதையும், ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டிருப்பதையும், காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் இரண்டடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதையும் பார்வையிட்டார்கள். மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதையும், மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும். ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவரும் பணியினையும், அவசர சேவை ஊர்தி (ஆம்புலன்ஸ்) வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதையும். பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் பார்வையிட்டார்கள்.

மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்பப்பட வேண்டும் என்றும், வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யவும், தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, தேவையான ஏற்பாடுகளை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 இந்த ஆய்வின் போது, குமாரபாளையம் நகர்மன்ற தலைவர் திரு.விஜய் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி சே.சுகந்தி, குமாரபாளையம் வட்டாட்சியர் திரு.சண்முகவேலு, காவல்துறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்