Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் ரூ.11.26 இலட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 
ரூ.11.26 இலட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.02.2024), மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆகியோர் முன்னிலையில் ரூ.11.26 இலட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.36 இலட்சம் மதிப்பில் 2 சாம்சங் ஸ்மார்ட் போர்டு, ரூ.24,276/- மதிப்பில் Floor stand, ரூ.37,310 மதிப்பில் கணினி, ரூ.4.88 இலட்சம் மதிப்பில் 40 எண்ணிக்கையில் சாம்சங் டேப், ரூ.76,700/- மதிப்பில் கீபோர்ட், ரூ.15,131/- மதிப்பில் பிரிண்டர், ரூ.1.14 இலட்சம் மதிப்பில் UPS, ரூ.1.29 இலட்சம் மதிப்பில் பள்ளி மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நாற்காலி, டேபிள் என மொத்தம் ரூ.11.26 இலட்சம் மதிப்பில் அறிவுத்திறன் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அறிவுத்திறன் வகுப்பறையில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட மணற்கேணி, மொழிகள் மற்றும் இதர செயலிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. செயலிகள் மூலம் மாணவர்கள் தங்களுக்கான பாடப்பகுதிகளை வீடியோ வடிவில் பார்த்து கல்வி திறனை மேம்படுத்திக் கொள்ளலாம். மேலும் இப்பகுதியில் உள்ள வினாக்கள் மாணவர்கள் தங்களுடைய திறனை சோதித்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிமையான வகையில் பாடங்களைக் கொண்டு சேர்ப்பதற்காக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் ஆசிரியர் தாங்களாகவே உருவாக்கிய பாடக் கருத்துக்களை வீடியோ வடிவில் திரையிட்டு கல்வி கற்பிக்க வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவுத்திறன் வகுப்பறையை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுடைய திறன்களை மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும், ஆசிரியர்கள் தங்களுடைய பாடப் பகுதிகளை மாணவர்களுக்கு எளிமையான வகையில் புரியும் வகையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே மாணவியர்கள் அறிவுத்திறன் வகுப்பறையை முழுமையாக பயன்படுத்தி தங்களுடைய கல்வி திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்