Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.60 இலட்சம் மதிப்பில் 
நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (26.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் 
தலைமையில் 114 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது :

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினை தனது கட்டுப்பாட்டில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். 

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்தூர், திருச்செங்கோடு, மோகனூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் புதிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை உதவித்தொகை, வங்கி கடன், ஆதார் அடையாள அட்டை, காதொலிகருவிகள், தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் நாளை நாமகிரிப்பேட்டையில் உள்ள அண்ணா வெள்ளி வாரச் சந்தை சமுதாய நலக்கூடத்தில் நடைபெறுகிறது.  

மேலும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விண்ணப்பிக்கும் மாற்றுத்தினாளிகளுக்கு எனது பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தொடர்ந்து இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கி வருகிறேன். அந்த வகையில் கடந்த மாதம் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் என இதுவரை மொத்தம் 57 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கியுள்ளேன். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9 இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கியுள்ளார்கள். 

மேலும் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அளித்த விண்ணப்பங்கள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு இன்றையதினமே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். 

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் தலா ரூ.96,011/- வீதம் ரூ.38,40,440/- மதிப்பில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தலா ரூ.11,313/- வீதம் ரூ.3,50,703/- மதிப்பில் 31 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி, தலா ரூ.11,313/- வீதம் ரூ.2,14,947/- மதிப்பில் 19 காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி, தலா ரூ.65,209/- வீதம் மதிப்பில் ரூ.7,17,300/- மதிப்பில் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், தலா ரூ.7,900/- வீதம் மதிப்பில் ரூ.23,700/- மதிப்பில் 
3 மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர், ரூ.9,050/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், ரூ.1,460/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு கிரட்சஸ், ரூ.1,636/- மதிப்பில் 6 மாற்றுத்திறனாளிக்கு பிரெய்லி வாட்ச், ரூ.550/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு எல்போ ஸ்டிக், என மொத்தம் 113 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.51.60 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார். 

மேலும், இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்த 1 மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் இலவச தையல் இயந்திரத்தினை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற துணைத் தலைவர் திரு.செ.பூபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) திரு.இரா.மகிழ்நன், இளநிலை மாறுவாழ்வு அலுவலர் திரு.ரா.பிரகாஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்