காணொளிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில்
ரூ.12.88 கோடி மதிப்பீட்டில் 4 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம், குமாராபாளையம், எலச்சிபாளையம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.12.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.5.54 கோடி மதிப்பீட்டில் 12 ஆய்வுக்கூடம் மற்றும் 2 கழிப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கலந்து கொண்டு புதியதாக திறக்கப்பட்ட புதிய கட்டடங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் 5 ஆய்வுக்கூடங்கள் மற்றும் 1 கழிப்பறையுடன் கூடிய புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை பார்வையிட்டு, வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர்கள் திரு.விஜய் கண்ணன் (குமாரபாளையம்), திரு. எம்.செல்வராஜ் (பள்ளிபாளையம்), மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.இராமசந்திரன் துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்