Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலை, கொங்கு திருமண மண்டபத்தில் இன்று (16.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18.12.2023 அன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெற்றது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு நாமக்கல் மாவட்டத்தில் 12,895 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 704 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நாமக்கல் வருவாய் கோட்டத்தில் முதல் கட்டமாக 3,349 பயனாளிகளுக்கு ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், திருச்செங்கோடு வருவாய் கோட்டத்தில் 1,033 பயனாளிகளுக்கு 
ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 4,382 நபர்களுக்கு ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 
இராசிபுரம் நகராட்சியில் வாழும் பிற்படுத்தப்பட்டோர் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பட்டா வழங்கப்படாமல் இருந்ததை தீர்வு காணும் வகையில் இன்றைய தினம் நடைபெறும் விழாவில் 187 நபர்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. பிள்ளாநல்லூர் பேரூராட்சி பகுதியில் 45 நபர்களுக்கும், ஆயில்பட்டி பகுதியில் 58 நபர்களுக்கும், பேட்டபாளையம், மோகனூர், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 704 பட்டாக்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறாக கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என‌ பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,240/- மதிப்பில் மோட்டார் பொருந்தி தையல் இயந்திரம், வருவாய் துறையின் சார்பில், 196 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பில் நத்தம் பட்டாக்கள், 139 பயனாளிகளுக்கு ரூ.1.38 கோடி மதிப்பில் வீட்டுமனை பட்டாக்கள், 98 பயனாளிகளுக்கு ரூ.91.60 இலட்சம் மதிப்பில் இணையவழி பட்டாக்கள், 13 பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பில் தோராயா பட்டா ஆணைகள், 57 பயனாளிகளுக்கு தனிப்பட்டா ஆணைகள், 13 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள், 8 நபர்களுக்கு ரூ.1.75 இலட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 3 நபர்களுக்கு ரூ.28,000/- திருமண உதவித்தொகை, 12 நபர்களுக்கு ரூ.32,750/- மதிப்பில் கல்வி உதவித்தொகை, 4 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பில் தற்காலிக உதவித்தொகை, திருச்செங்கோடு மற்றும் மோகனூர் பகுதிகளில் 81 நபர்களுக்கு ரூ.64.50 இலட்சம் மதிப்பில் பட்டாக்கள், 

கூட்டுறவுத்துறை சார்பில் 371 நபர்களுக்கு ரூ.1.32 கோடி பயிர்க்கடன், 32 நபர்களுக்கு ரூ.2.60 கோடி மதிப்பில் கால்நடை பராமரிப்பு கடன், 9 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.64 இலட்சம் மதிப்பில் கடன் உதவி, 7 நபர்களுக்கு ரூ.5.35 இலட்சம் மதிப்பில் நேரடிகடன், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பில் கடன் உதவி, 3 நபர்களுக்கு ரூ.3.24 இலட்சம் மதிப்பில் மத்திய கால கடன் உதவி, 4 நபர்களுக்கு ரூ.2.32 இலட்சம் நடைமுறை மூலதனக் கடன், 10 நபர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பில் சேமிப்பு அடிப்படையிலான கடன், 5 நபர்களுக்கு ரூ.1.25 இலட்சம் மதிப்பில் சிறு வணிக கடன், பேரூராட்சிகள் துறை சார்பில் 199 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் மனைப்பிரிவு அங்கீகாரம், நகராட்சி நிர்வாகம் சார்பில் 100 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம் மனைப்பிரிவு அங்கீகாரம் மற்றும் புதிய குடிநீர் இணைப்பு, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் 151 நபர்களுக்கு பெயர் மாற்றம், தொழிலாளர் நல வாரியம் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சார்பில், 25 நபர்களுக்கு புதுப்பித்தல் மற்றும் பதிவு, 

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.830/- மதிப்பில் தார்பாய், 1 விவசாயிக்கு ரூ.260/- மதிப்பில் ஜிங்க் சல்பெட் விநியோகம், 1 விவசாயிக்கு ரூ.2,040/- மதிப்பில் மின்கலத் தெளிப்பான், 1 விவசாயிக்கு ரூ.42,000/- மதிப்பில் ரொட்டவேட்டர், 1 விவசாயிக்கு ரூ.1,250/- மதிப்பில் சிறுதானிய நுண்ணூட்டம் விநியோகம், 2 விவசாயிகளுக்கு ரூ.240/- மதிப்பில் தென்னங்கன்றுகள், 1 விவசாயிக்கு ரூ.3,000/- மதிப்பில் மண்புழு உர படுகை, 2 விவசாயிகளுக்கு ரூ.6,000/- மதிப்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித்திட்டம் சார்பில் மண்புழு உரப்படுகை, 1 விவசாயிக்கு ரூ.150/- மதிப்பில் உயிர் உரங்கள், 1 விவசாயிக்கு ரூ.2,000/- மதிப்பில் மின்கலத்தெளிப்பான், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.8.00 இலட்சம் மதிப்பில் சிப்பம் கட்டும் அறை, 1 விவசாயிக்கு ரூ.15,000/- மதிப்பில் மோட்டார் பம்பு செட், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.3.18 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.12 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,646 பயனாளிகளுக்கு ரூ.9.31 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகர்மன்ற தலைவர்கள் திரு.து.கலாநிதி (நாமக்கல்), முனைவர் கவிதா சங்கர் (இராசிபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு, வருவாய் கோட்டாட்சியர்கள் (நாமக்கல்) திரு.மா.க.சரவணன், திருமதி சே.சுகந்தி (திருச்செங்கோடு), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், உதவி ஆணையர் கலால் திரு.எம்.புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கே.இராமசந்திரன், இணை இயக்குநர் வேளாண்மை திரு.எஸ்.துரைசாமி துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்