பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தினை திறந்து வைத்து, நீட்டிக்கப்பட்ட பேருந்து வழித்தடத்தினை
தொடங்கி வைத்தார்.
*****
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பட்டணம் பேரூராட்சி, வார்டு எண் – 1, போதமலை தெரு பகுதியில் இன்று (03.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டில் பாராளுமன்ற மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திறந்து வைத்தார்.
பட்டணம் பேரூராட்சியானது 9,612 மக்கள் தொகையினை கொண்ட ஓர் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 5.63 சதுர கிலோ மீட்டர். இராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமையப்பெற்றுள்ளது. இப்பேரூராட்சியைச் சுற்றி 8 விவசாய கிராமங்கள் அமைந்துள்ளது. மேலும் விவசாய கிராம மக்கள் பட்டணத்தை மையமாக கொண்டுள்ளனர். எனவே, விவசாய மக்கள் உற்பத்தி செய்யப்படும் பால் விற்பனை செய்வதற்கு போதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் ஏதுமின்மை காரணமாக பட்டணம் பேரூராட்சியைச் சுற்றி உள்ள 8 விவசாய கிராமங்களில் உள்ள பொதுமக்களின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கோரிக்கையாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் விவசாய பொதுமக்கள் கோரிக்கையினை நிறைவேற்றி பயனடையும் வகையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.17.00 இலட்சம் மதிப்பீட்டிலிருந்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டப்பட்டுள்ளதால் பட்டணம் பேரூராட்சி சுற்றியுள்ள 8 கிராம விவசாய பொதுமக்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள்.
தொடர்ந்து, இராசிபுரம், குருசாமிபாளையம், மொஞ்சனூர், ஒ-சௌதாபுரம், வெள்ளப்பிள்ளையார் கோவில், ராசாப்பாளையம், வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி வழியாக இயக்கப்பட்ட வந்த நகர பேருந்து வழித்தடமானது ஓ.செளதாபுரம் முதல் ராசாப்பாளையம் வரையிலான நீட்டிக்கபட்ட பேருந்து வழித்தடத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்தானது இராசிபுரத்திலிருந்து காலை 8.02 மணிக்கும், மாலை 3.45 மணிக்கும் புறப்படும் வகையில் இயக்கப்படவுள்ளது.
மேலும், இராசிபுரம், ஆர்.புதுப்பளையம், கல்லாங்குளம் வழியாக இயக்கப்பட்டு வந்த நகர பேருந்து வழித்தடமானது ஆர்.புதுப்பாளையம் முதல் சாணார் புதூர் வரையிலான நீட்டிக்கபட்ட வழித்தடத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்தானது இராசிபுரத்திலிருந்து காலை 8.05 மணிக்கும், மாலை 5.00 மணிக்கும் புறப்படும் வகையில் இயக்கப்படவுள்ளது.
முன்னதாக, 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 சென்னையில் ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் வாள் சண்டை பிரிவில் நாமக்கல் விளையாட்டு விடுதி மாணவர் முகமது பாசில் அவர்கள் விளையாடி மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் நாமக்கல் நகராட்சி முத்துசாமி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என். இராஜேஸ்குமார் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப., அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.இராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நேரில் சந்தித்து, வெண்கல பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர்கள் திரு.து.கலாநிதி (நாமக்கல்), முனைவர் கவிதா சங்கர் (இராசிபுரம்), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.இராமசுவாமி, இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், பட்டணம் பேரூராட்சி தலைவர் திருமதி இரா.போதம்மாள், துணைத் தலைவர் திரு.பொன்.நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், ஆவின் பொது மேலாளர் மருத்துவர் சண்முகம், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்