Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி, என்.புதுப்பட்டி, திண்டமங்கலம், பொட்டணம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (16.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நாமக்கல் மாவட்டம், வகுரம்பட்டி ஊராட்சி, மகரிஷி நகரில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, சேந்தமங்கலம் வட்டம், பொட்டணம் ஊராட்சியில் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30.95 இலட்சம் மதிப்பீட்டில் ஏ.கே.சமுத்திரம் முதல் கெஜல்நாய்க்கன்பட்டி வரை சாலை அமைக்கும் பணி ஆகிய திட்டப்பணிகளுக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, திண்டமங்கலம், என்.புதுப்பட்டி, பொட்டணம் ஊராட்சிகளில் தலா ரூ.33.00 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.99.00 இலட்சத்தில் 3 புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிக்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பொது சுகாதார துறையின் சேவைகளும், கிராம சுகாதார செவிலியர்களது அனைத்து களப்பணிகளும், குறிப்பாக கர்ப்பிணிகள் பதிவு, கர்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிப்பணிகள் இத்துணை சுகாதார நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். 
இந்நிகழ்ச்சிகளில் அட்மா குழுத்தலைவர் திரு.அசோக் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.குமார் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்