Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்டம் ”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் கு,சிவராமன் அவர்கள் ”ஒற்றை நலம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டம் ”2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவின் 
நிறைவு நாள் நிகழ்ச்சியில்  சித்த மருத்துவர் கு,சிவராமன் அவர்கள் 
”ஒற்றை நலம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தில், 2-ஆம் ஆண்டு மாபெரும் ”புத்தகத்திருவிழா”  26.01.2024 முதல் 02.02.2024 வரை 8 நாட்கள் நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) நடைபெற்றது. இப்புத்தக திருவிழாவானது 80-க்கும் மேற்பட்ட அரங்குகள், 16 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுதுறைகளின் பணிவிளக்க அரங்குகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா (26.01.2024) அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் இன்று (02.02.2024) கலை சுடர்மணி நாமக்கல் பிரபு வேணுகோபால் குழுவினர் மற்றும் பள்ளி / கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பசுமை நாமக்கல் கம்பன் கழகம், செயலாளர் திரு.பசுமை மா.தில்லை சிவக்குமார் அவர்கள் வல்லமை தாராயோ! என்ற தலைப்பிலும், சித்த மருத்துவர் 
கு.சிவராமன் அவர்கள் ”ஒற்றை நலம்” என்ற  தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

முன்னதாக, மாபெரும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருக்கும் புத்தக அரங்குகள், அறிவியல் கோளரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி, பல்வேறு அரசுத்துறைகளின் பணிவிளக்க கண்காட்சியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றார்கள். 

இந்நிகழ்ச்சியில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் / தனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி க.ரா.மல்லிகா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் (பொ) திருமதி ச.தேன்மொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) திரு.இரா.மகிழ்நன், அரசுத்துறை 

கருத்துரையிடுக

0 கருத்துகள்