பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளி திரு.செல்வராஜ் அவர்களுக்கு ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில்
புதிய வீடு கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் .
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது மேற்பார்வையில் வைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, மருத்துவ சிகிச்சைகள், வங்கி சேவைகள் என பல்வேறு வகையான சேவைகளை துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களிடம் சமூக ஆர்வலர்கள் தெரிவித்த கோரிக்கையின்படி, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, தோக்கம்பாளையத்தை சேர்ந்த திரு.செல்வராஜ் அவர்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் மாற்றுத்திறனாளியாகவும், தனது வயது முதிர்ந்த தந்தையுடன் (80) சிறிய குடிசையில் அவர்களின் சொந்த இடத்தில் வசித்து வருவதாகவும் தெரிவித்ததை தொடர்ந்து நாமக்கல் வட்டாட்சியர் மூலம் அதன் உண்மை தன்மையை அறிய மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டார்.
தொடர்புடைய மாற்றுத்திறனாளியின் நிலையை அறிந்து உடனடியாக அவர்களுக்கு கையால் இயக்க கூடிய மூன்று சக்கர சைக்கிள், அவர்களது வீட்டுமனை பட்டா நகல், மாத உதவித்தொகை ரூ.2000/- பெற்றுவருகிறார்கள். மேலும், கூடுதலாக ரூ.1000/- உதவித்தொகை என மொத்தம் ரூ.3000/- உதவித்தொகை பெற ஆணை, அவர்களது சொந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை என மேற்கண்ட சேவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களின் துரித நடவடிக்கைகளின்படி, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 29.01.2024 அன்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், மாற்றுத்திறனாளி திரு.செல்வராஜ் அவர்களுக்கு உடனடி நிவாரணங்களாக வழங்கினார்கள். மேலும், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளி திரு.செல்வராஜ் அவர்களின் நிலை கருதி அவர்களின் தந்தையிடம் ரூ.10,000/- ரொக்கமாக தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் ஊராட்சி, தோக்கம்பாளையத்தில் 08.02.2024 அன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாற்றுத்திறனாளி திரு.செல்வராஜ் அவர்களுக்கு சமூக பொறுப்பு நிதியிலிருந்து (சி.எஸ்.ஆர்)
ரூ.2.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
0 கருத்துகள்