பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இரஜேஸ்குமார் அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 3,349 பயனாளிகளுக்கு ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
********
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், இராசிபுரம் ஆகிய நகராட்சிகள், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, பட்டணம், பிள்ளாநல்லூர், அத்தனூர் மற்றும் வெண்ணந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் இன்று (03.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இரஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் (நாமக்கல்), திரு.கு.பொன்னுசாமி அவர்கள் (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 3,349 பயனாளிகளுக்கு ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இரஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18.12.2023 அன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெற்றது.
மேற்படி நடைபெற்ற முகாம்களில், வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், கூட்டுறவுத் துறை, பேரூராட்சிகள் துறை, மின்சாரத்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் முதற்கட்டமாக, நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் இராசிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2 நகராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 3,349 பயனாளிகளுக்கு ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படகிறது.
அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு இன்னும் சொல்லப்போனால் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதே மோகனூர் பேரூராட்சியில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட இருவருக்கு ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் சீரிய முயற்சியோடு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நானும் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களோடு சென்று அதற்கான சாவியினை உரிமையாளரிடம் வழங்கி சிறப்பித்தோம். அதே போன்று வள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவருக்கு எவ்வித ஆதரவும் இன்றி வீடு வசதி கூட இல்லாத ஏழ்மை நிலையில் இருந்தவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சீரிய முயற்சி மேற்கொண்டு அவருக்கு வீடு கட்ட இலவச வீட்டு மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்கள். இவ்வாறாக கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
இன்றையதினம் நடைபெறும் இவ்விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்ட தனித்துணை ஆட்சியர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மோகனூர் பேரூராட்சியை பொருத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக மோகனூரில் சமுதாயக்கூடம், சந்தை, மயான வசதி என ஏறத்தாழ சுமார் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் விரைவில் திறப்பு விழா காண தயார் நிலையில் உள்ளன.
மோகனூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்கவும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடவும் மோகனூர் பேரூராட்சிக்கு மட்டும் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் மோகனூர் பேரூராட்சிக்கென தனி கூட்டு குடிநீர் திட்டம் ரூ.22.77 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இக்கூட்டு குடிநீர் திட்டத்தினை பெற உறுதுணையாக இருந்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேறும் பட்சத்தில் எதிர்காலத்தில் மோகனூரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத வகையில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.
இன்றையதினம் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசு நலத்திட்ட உதவிகளை பெரும் பயனாளிகள் அனைவரும் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இரஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சி இராஜமுருகன்
திருமண மண்டபத்தில் மக்களுடன் தொடர்பு திட்ட முகாமின் மூலம் பயனடைந்த 346 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், எருமப்பட்டி பேரூராட்சி அய்யா மஹாலில் 221 பயனாளிகளுக்கு ரூ.42.27 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், நாமக்கல் நகராட்சி பாவலர் முத்துசாமி நகராட்சி திருமண மண்டபத்தில் 643 பயனாளிகளுக்கு ரூ.1.79 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், நாமக்கல் நகராட்சி, அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பொதுமக்களுடன் உணவு அருந்தினர்.
சேந்தமங்கலம் பேரூராட்சி, வசந்த மஹாலில் 205 பயனாளிகளுக்கு
ரூ.1.06 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி, துத்திக்குளம், கலைவாணி திருமண மண்டபத்தில் 350 பயனாளிகளுக்கு ரூ.3.84 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், சீராப்பள்ளி பேரூராட்சி, சௌடேஸ்வரி திருமண மண்டபத்தில்
207 பயனாளிகளுக்கு ரூ.92.80 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, அண்ணா வெள்ளி வார சந்தையில் 245 பயனாளிகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி கொங்கு திருமண மண்டபத்தில் 138 பயனாளிகளுக்கு ரூ.45.71 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், பட்டணம் பேரூராட்சி, இரங்கசாமி திருமண மண்டபத்தில் 169 பயனாளிகளுக்கு ரூ.43.54 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், இராசிபுரம் நகராட்சி, எல்லப்ப தெரு, ஸ்ரீ கிருஷ்ண மஹாலில் 329 பயனாளிகளுக்கு ரூ.47.00 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், பிள்ளாநல்லூர் பேரூராட்சி, சந்தை பாவடி, செங்குந்தர் சமுதாய கூடத்தில் 182 பயனாளிகளுக்கு ரூ.76.92 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், அத்தனூர் பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு, பாலாஜி மஹாலில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.49 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், வெண்ணந்தூர் பேரூராட்சி தங்கசாலை வீதி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் 177 பயனாளிகளுக்கு ரூ.37.11 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 3,349 பயனாளிகளுக்கு ரூ.13.14 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இரஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர்கள் திரு.து.கலாநிதி (நாமக்கல்), முனைவர் கவிதா சங்கர் (இராசிபுரம்), இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திரு.கே.பி.ஜெகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ச.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர்கள் திரு.சென்னுகிருஷ்ணன் (நாமக்கல்), திரு.இரா.சேகர் (இராசிபுரம்), பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்