Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் 336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் 
336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், 
2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார். 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இன்று (10.02.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடைய 97 பெண்களுக்கு தலா ரூ.25,000/- விதம் ரூ.24.25 இலட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 776 கிராம் தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் படிப்பு கல்வி தகுதியுடைய 239 பெண்களுக்கு தலா ரூ.50,000/- விதம் 
ரூ.1.19 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தலா 8 கிராம் வீதம் 1,912 கிராம் தங்கம் என மொத்தம் 336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தலா 8 கிராம் வீதம் 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ 
அவர்கள் பேசியதாவது :
 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மகளிருக்காக இலவச பேருந்து பயணம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000/- ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கிடும் புதுமைப்பெண் திட்டம் என பெண்கள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பெண்களுக்கான அரசு என அனைவரும் நினைத்திடும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.


இந்த ஆண்டு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை நாம் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்து பெண்களுக்கு பெருமை சேர்த்தார். இலவச எரிவாயு இணைப்பு வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தை தொடங்கி வைத்தவர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.1,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேறினால் தான் மாநிலம் முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு மகளிரின் தொழில் மேம்பாட்டிற்காக மேலும் ரூ.30,000 கோடி கடனுதவி வழங்கப்படவுள்ளது என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சீரிய முயற்சிகளினால் கொண்டு வருகின்ற திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்கள் வரை சென்றடைந்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இன்றையதினம் 336 ஏழை பெண்களுக்கு ரூ.1.43 கோடி மதிப்பில் திருமண நிதியுதவியுடன், தலா 8 கிராம் வீதம் 2,688 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் தெரிவித்தார்.   

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) திருமதி க.மோகனா உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்