Hot Posts

6/recent/ticker-posts

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.360.00 கோடி மதிப்பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தினை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.”

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மக்கள் தொடர்பு முகாமில் 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் 
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தகவல்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பவித்திரம்புதூர் கிராமத்தில் இன்று (14.022024) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன்கிழமை வட்ட அளவில் ஒரு கிராமத்தினை தேர்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை களைய ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை வட்ட அளவில் ஒரு கிராமத்தை தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சேந்தமங்கலம் வட்டம், பவித்திரம்புதூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சுகாதாரம், கல்வி, மருத்துவம், பேருந்துவசதி, சாலை வசதி என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கொண்டு வரப்படாத திட்டங்கள் அனைத்தும் இந்த இரண்டரை ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளார்கள். 



எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் உரிய கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 24 ஊராட்சிகளை சேர்ந்த 89க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 14 ஊராட்சிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.360.00 கோடி மதிப்பில் எருமப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தினை அறிவிக்க உள்ளார்கள். 

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு விளையாட்டு மைதானம் வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அதற்குரிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விளையாட்டு மையதானம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பார்வையிட்டார். மேலும், துறை சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத்திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.





தொடர்ந்து மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2,100 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், சுகாதாரத்துறையின் சார்பில் 10 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.20,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,560 மதிப்பில் காதொலி கருவிகள், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலகு சார்பில் 8 மாணக்கர்களுக்கு ரூ.2.72 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை, வருவாய் துறையின் சார்பில், 49 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 16 பயனாளிகளுக்கு தோராயா பட்டா ஆணைகள், 1 பயனாளிக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணை, 31 பயனாளிகளுக்கு ரூ.31.00 இலட்சம் மதிப்பில் இ-பட்டாக்கள், 51 பயனாளிகளுக்கு ரூ.51.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், 1 நபருக்கு விதவை சான்றிதழ், 10 பயனாளிகளுக்கு நகல் குடும்ப அட்டைகள்,

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் ரூ.2.49 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 2 விவசாயிகளுக்கு ரூ.775/- மதிப்பில் மண் வளத்திட்ட நலத்திட்ட உதவிகள், 1 விவசாயிக்கு ரூ.400/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 1 விவசாயிக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.140/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 1 விவசாயிக்கு மாநில வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.250/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில், 5 விவசாயிகளுக்கு ரூ.7,000/- மதிப்பில் வெண்பட்டு புழு வளர்ப்பு பயிற்சி உபகரணங்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.2.01 இலட்சம் மதிப்பில் சொட்டு நீர் பாசன கருவிகள், மாநில தோட்ட கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 விவசாயிகளுக்கு ரூ.58,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 விவசாயிக்கு ரூ.85,000/- மதிப்பில் பவர் டிரில்லர், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மகளிர் திட்டம் சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.38.00 இலட்சம் கடனுதவி, கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.70,000/- மதிப்பில் கடன் உதவிகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் 1 நபருக்கு ரூ.2.50 இலட்சம் கடனுதவி, 

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6,552 மதிப்பில் இலவச சலவைப்பெட்டி, 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 4 நபர்களுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பில் கறவை மாடு கடன், கூட்டுறவு துறை சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.15.94 இலட்சம் பயிர்கடன், 10 நபர்களுக்கு ரூ.7.88 இலட்சம் கால்நடை பராமரிப்பு கடன் உதவி, 30 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.32.12 இலட்சம் மதிப்பில் கடன் உதவி, ஊரக வளர்ச்சி துறை சார்பில், 56 நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் என மொத்தம் 386 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.

தொடர்ந்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ரூ.97.67 இலட்சம் மதிப்பில் கொல்லிமலை பகுதிக்கு சார்நிலை கருவூல அலுவலகத்தை திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு.எம்.சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.வெ.முருகன், பழங்குடியின நல திட்ட அலுவலர் திரு.பீட்டர் ஞான ராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.சதீஷ்குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.எஸ்.துரைசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.கி.கணேசன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.நடராஜன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திரு.முருகன், உதவி ஆணையர் தொழிலாளர் நலன் திரு.எல்.திருநந்தன், மாவட்ட கருவூல அலுவலர் திரு.எ.கார்த்திகேயன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) திருமதி எஸ்.சசிகலா, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்