Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றதமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில்4 கலைக்குழுவினருக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற
தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில்
4 கலைக்குழுவினருக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.

********

நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (16.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெ.ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில், கலைப் பண்பாட்டு இயக்ககம் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடும் கலைச் சங்கமம் நிகழ்ச்சியில், 4 கலைக்குழுவினருக்கு தலா ரூ.30,000 வீதம் ரூ.1.20 இலட்சம் மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினார்.


 தமிழ்நாடு அரசால் 1955 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற அமைப்பானது, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில், 1973 -ம் ஆண்டில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தை பொது (பண்பாட்டு) துறையின் கீழ் கொண்டு வந்து, தனது நேரடி வழிகாட்டுதலின்படி பல்வேறு கலை திட்டப்பணிகள் மற்றும் கலைஞர்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். 

கலை பண்பாட்டுத் துறையின் ஓர் அங்கமாகத் திகழும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் நிதியுதவியின் மூலம் தொன்மையான கலைகளை வளர்த்தல், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலை வடிவங்களை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், தமிழ்நாடு பாரம்பரியக் கலைகளை வெளிமாநிலங்களிலும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல் மற்றும் தமிழ்கலைகளின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பு செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல் மற்றும் நலிந்த நிலையிலுள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்குதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மேற்கொண்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு வழங்கப்பட்ட வந்த நிதி ஒதுக்கீட்டினை ரூ.3.00 கோடியாக உயர்த்தி உள்ளார்கள். மேலும், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொற்கிழித் தொகையினை ரூ.50,000/-லிருந்து ரூ.1.00 இலட்சமாகவும், கலை பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு கலைக் குழுக்களை அயல் மாநிலங்களுக்கு அனுப்பிட வழங்கப்பட்டு வந்த நிதி தொகையை ரூ.15.00 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாக உயர்த்தியும், கிராமியக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை அணிகலன்கள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்கிட வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை ரூ.10,000/- ஆக உயர்த்தி ஆண்டுதோறும் 500 கலைஞர்களுக்கு வழங்கிடவும் உத்திரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில்
966 கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாரியத்தில் பதிவுபெற்ற 165 உறுப்பினர்களுக்கு
ரூ.5.30 இலட்சம் மதிப்பில் கல்வி, திருமணம், கண்ணாடி, இயற்கை மரணத்திற்கான நிதி உதவி என நலதிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் 796 கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2002-2003 முதல் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மாவட்டக் கலை விருதுகள் 100 கலைஞர்களுக்கும், விருதுக்குரிய தொகை, பொற்கிழி, சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தின் வாயிலாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செவ்வியல் மற்றும் நுண்கலையில் தனிநபர் பதிவாக 05 நபரும், கிராமிய கலைக்குழு பதிவாக 26 குழுவினர்களும் பதிவு செய்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, விழா ஒருங்கிணைப்பாளர் திரு.வே.பிரபு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்