விளையாட்டு விடுதியில் பயிலும் 55 மாணவிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில் விளையாடுவதற்கு அணியப்படும் காலணிகளை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் 08.02.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
விளையாட்டு விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சமையலறையில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை பார்வையிட்டு, உணவுப்பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவிகள் தங்கும் அறையில் மின் விளக்கு, மின் விசிறி, படுக்கை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து விளையாட்டு விடுதியில் பயிலும் 55 மாணவிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் விளையாடுவதற்கு அணியப்படும் காலணிகளை (Sports Shoes) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர்
திருமதி எஸ்.கோகிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்