Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நாரைகிணறு பகுதி வாழ் மக்கள் 723 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.32.84 கோடி மதிப்பீட்டில் 587 பட்டாக்களை நாளை 28.02.2024 வழங்க உள்ளார்கள்.

மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் நாரைகிணறு பகுதி வாழ் மக்கள் 
723 நபர்கள் பயன்பெறும் வகையில் ரூ.32.84 கோடி மதிப்பீட்டில் 
587 பட்டாக்களை நாளை 28.02.2024 வழங்க உள்ளார்கள்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள் ஆகியோர் நாளை 28.02.2024 நாரைகிணறு பகுதியில் 723 நபர்களுக்கு பட்டா வழங்க உள்ளதை முன்னிட்டு, அதற்கான விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் இன்று (27.02.2024) நாரைகிணறு, மங்களபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, இராசிபுரம் வருவாய் வட்டம், முள்ளுக்குறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட மங்களபுரம், நாரைகிணறு மற்றும் மத்துரூட்டு ஆகிய கிராமங்களில் வசித்து வரும் விவசாயிகளுக்கு இதுநாள் வரை பட்டா வழங்கப்படாமல் இருந்தது. இப்பகுதி விவசாயிகள் பட்டா வழங்ககோரி நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். பட்டா இல்லாத காரணத்தால் இப்பகுதி விவசாயிகள் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை பெற முடியாமலும், விவசாய பணி அபிவிருத்திக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில் மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் அவர்கள் 2022 ஆம் ஆண்டு வருவாய்த்துறையின் மானிய கோரிக்கையின் போது நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, இராசிபுரம் வட்டம், முள்ளுக்குறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட மங்களபுரம், நாரைகிணறு மற்றும் மத்துரூட்டு ஆகிய கிராமங்களில், நாரைகிணறு நிலவரித்திட்டத்தின் கீழ், சிறப்பு வட்டாட்சியர் பணி அமர்த்தப்பட்டு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள அனுபவம் செய்துவரும் விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், தனி வட்டாட்சியர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு, மங்களபுரம், நாரைகிணறு மற்றும் மத்துரூட்டு ஆகிய கிராமங்களில் நில அளவீடு செய்யப்படாத பகுதிகளுக்கு நில அளவீடு செய்யப்பட்டு பட்டா வழங்கும் பணி தொடங்கப்பட்டு 1,412 ஹெக்டர் அளவுள்ள நிலங்களுக்கு பட்டா வேண்டி 1,304 விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், தனி வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் நில அளவை துறையினர் ஆகியோரால் நில விஸ்தாரங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் அடிப்படையில் தகுதிக்கான அனுபவ விவசாயிகள் மற்றும் பட்டாதாரர்கள் கண்டறியப்பட்டு முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.01.2023 அன்று 139 விவசாயிகளுக்கு 122 ஹெக்டர் அளவிற்கான பட்டா மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. 

மீதமுள்ள 723 விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கிய மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு 735 ஹெக்டர் அளவிற்கு பட்டா வழங்கும் பணிகள் முடிவுற்று பட்டா தயாரிக்கப்பட்டு நாளைய தினம் 28.02.2024 மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் 723 விவசாயிகளுக்கு பட்டா வழங்க உள்ளார்கள். 

இதுவரை சட்டமன்ற அறிவிப்பின்படி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தனிவட்டாட்சியர் மூலம் தகுதிக்காண விவசாய பட்டாக்களுக்காக 862 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 857 ஹெக்டர் விவசாய நிலத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 442 நபர்களில் சிலர் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களில் தகுதி உள்ளவர்கள் மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கும் மனுவின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பட்டா வழங்க உறுதுணையாக இருந்த அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் இப்பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

இரண்டாம் கட்டமாக மங்களபுரம், நாரைகிணறு மற்றும் மத்துரூட்டு ஆகிய 3 கிராமங்களில், 13 குக்கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,233 ஹெக்டர் பரப்பளவிற்கு தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டி கோரிக்கை வைத்துள்ளார்கள். விவசாயிகளின் கோரிக்கை மனுவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கோப்புகள் தயார் செய்யப்பட்டு அரசிற்கு அனுப்பப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு பட்டா தொடர்ந்து வழங்கபடும் என உறுதி அளிக்கிறேன் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாளைய தினம் 28.02.2024 நாமகிரிப்பேட்டை, மங்களபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், மாண்புமிகு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 723 நபர்களுக்கு பட்டா வழங்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ அவர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். மேலும், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எ.கே.பி.சின்ராஜ் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். 

இந்த ஆய்வுகளில் அட்மா குழுத்தலைவர் திரு.இராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.த.முத்துராமலிங்கம் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்