முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 ஆவது, பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடி வரும் நிலையில் ,இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில், பள்ளிபாளையம் நகர அதிமுக சார்பில், செல்வி ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .
நிகழ்வுக்கு பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார் .
இதில் செல்வி ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பிறகு அதிமுக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் அதிமுக நகர துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், அம்மா பேரவை செயலாளர் டி.கே.சுப்பிரமணி, மாணவரணி செயலாளர் ஆடிட்டர் ராஜா, வார்டு உறுப்பினர்கள், ஐடிவிங் அணியினர் என பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்டனர்..
0 கருத்துகள்