நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
ரூ.7.80 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் (தெற்கு) இன்று (08.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 242 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.40 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் கபடி, கால்பந்து, கைப்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற 6 அணிகளுக்கு ரூ.2.40 இலட்சம் பரிசுத்தொகை என மொத்தம் ரூ.7.80 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து மாணவ, மாணவியர்களுக்கு இல்லம் தேடி கல்வித்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத்திட்டம், உயர்கல்வி பயில 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்.
அரசு பள்ளியில் பயில்வது என்பது பெருமைமிக்க ஒன்றாகும். நம் மாவட்டத்தில் பல்வேறு உயர் பதவி வகிப்பவர்கள் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்கள் தான். அரசுப்பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற்று தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்திட முன்வர வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 5 முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர். ஒவ்வொரு முறையும் மாணவ, மாணவியர்களுக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை, மதிய சத்துணவுடன் முட்டை, கிராம புற மாணவர்கள் தொழிற்கல்வி பயில இட ஒதுக்கீடு, தொழிற்கல்வி பயில நடைமுறையில் இருந்த நுழைவு தேர்வை ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மேலும், அரசுப்பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை முறையாக நியமனம் செய்தவர். இவ்வாறு அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை மாணவ, மாணவியர்கள் அறியும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து நன்கு பயின்று ஒழுக்கத்தை கடைபிடித்து தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 200 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.4.00 இலட்சம் பரிசுத்தொகையும், பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் ரூ.40,000/- பரிசுத்தொகையும் என மொத்தம் ரூ.4.40 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும், கல்லூரி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.60,000 பரிசுத்தொகையும், கல்லூரிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 8 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5,000/- வீதம் ரூ.40,000/- பரிசுத்தொகை என மொத்தம் ரூ.1.00 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கபடி, கால்பந்து மற்றும் கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 6 விளையாட்டு அணிகளை சேர்ந்த வீரர்களுக்கு ரூ.2.40 இலட்சம் பரிசுத்தொகை என மொத்தம் 242 மாணவ, மாணவியர்கள் மற்றும் 6 விளையாட்டு அணி வீரர்களுக்கு ரூ.7.80 இலட்சம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 2-ஆம் ஆண்டு மாபெரும் புத்தக திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசுத்துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மேலாண்மை இயக்குநர் / தனி மாவட்ட வருவாய் அலுவலர், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமதி.க.ரா.மல்லிகா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு எம்.சிவக்குமார், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.மா.க.சரவணன், காவல் துணை கண்காணிப்பாளர் (நாமக்கல்) திரு.ஆர்.தனராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி கோகிலா உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்