நாமக்கல் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 31.01.2024 அன்று நள்ளிரவில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் (31.01.2024) அன்று காலை 9.00 மணி முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து 31.01.2024 அன்று நள்ளிரவு எர்ணாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்துகளின் இருப்பு, நோயாளிகளின் வருகை விபரம், வழங்கப்படும் சிகிச்சைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், எர்ணாபுரம் பகுதியில் தெரு விளக்குகள் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு தினசரி வழங்கப்படும் உணவு பட்டியல், சுத்தகரிப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது, மின் விளக்குகள் மற்றும் மின்விசிறி செயல்பாடு, மாணவர்களுக்கான படுக்கை வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் விபரம், உள்/வெளி நோயாளிகளின் தினசரி வருகை விபரம், அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகளின் பிரிவு, இரவு நேரங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார்.
0 கருத்துகள்