மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்- மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு
ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேச்சு.
********
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் இன்று (10.02.2024) மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பதிவு செய்ய வந்த மக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் ”மக்களுடன் முதல்வர் திட்டம்” 18.12.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 18.12.2023 அன்று முதல் 29.12.2023 வரை ஒன்பது நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 03.00 மணி வரை (அனைத்து வேலை நாட்களிலும்) நாமக்கல், இராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளில் மொத்தம் 39 முகாம்கள் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். அதுமட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அரசின் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு இன்னும் சொல்லப்போனால் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் மக்களுடன் முதல்வர் மற்றும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களின் மனுக்கள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.இந்த திட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் அனைத்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே நேரடியாக தீர்வு வழங்குவதற்கு சமமான திட்டங்கள் ஆகும். இதுவரை இல்லாத அளவில் கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் அந்தந்த பகுதிகளில் தங்கி நேரடியாக பொதுமக்களை சந்திந்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகின்றார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்களில், வருவாய்த்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், கூட்டுறவுத் துறை, பேரூராட்சிகள் துறை, மின்சாரத்துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை ஆகிய 13 துறைகளைச் சார்ந்த கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சிகள், மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பயன்பெற்ற 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறாக கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கும், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் எனது வாழத்துக்கள் மற்றும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் அனைவரும் அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பேரூராட்சி, சந்தை பாவடி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் மக்களுடன் தொடர்பு திட்ட முகாமின் மூலம் பயனடைந்த 235 பயனாளிகளுக்கு ரூ.1.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், திருச்செங்கோடு நகராட்சி, சட்டையாம்புதூர் செங்குந்தர் திருமண மண்டபத்தில் மக்களுடன் தொடர்பு திட்ட முகாமின் மூலம் பயனடைந்த 445 பயனாளிகளுக்கு ரூ.2.39 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், பள்ளிபாளையம் நகராட்சி, ஜி.வி.மஹாலில் பள்ளிபாளையம் நகராட்சி மற்றும் ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் மக்களுடன் தொடர்பு திட்ட முகாமின் மூலம் பயனடைந்த 353 பயனாளிகளுக்கு ரூ.1.36 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,033 பயனாளிகளுக்கு ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் நகர்மன்ற தலைவர்கள் திருமதி நளினி சுரேஷ்பாபு (திருச்செங்கோடு), திரு.எம் செல்வராஜ் (பள்ளிபாளையம்), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, நகராட்சி ஆணையாளர்கள் திரு இரா.சேகர் (திருச்செங்கோடு), திருமதி எம்.தாமரை (பள்ளிபாளையம்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்