தொடர்ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (13.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காவக்காரப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் விபரங்கள் குறித்து பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.
மேலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முட்டாஞ்செட்டி பகுதியில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். காவக்காரப்பட்டி ஊராட்சி, வள்ளுவர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு வழங்க தயார் செய்யப்பட்டிருந்த உணவை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கன்வாடி மையத்திற்கு வருகை தரும் குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை குறித்தும் பணியாளரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, வடவத்தூர் ஊராட்சியில் ரூ.6.31 இலட்சம் மதிப்பீட்டில் ஜம்புமடை அரசினர் மேல்நிலைப்பள்ளி முதல் ராமசாமி தோட்டம் வரை தார் சாலை பலப்படுத்தும் பணி, எம்.மேட்டுப்பட்டி ஊராட்சியில் ரூ.5.99 இலட்சம் மதிப்பீட்டில் பாய் பெட்டிக்கடை முதல் ரெட்டியார் வீடு வரை தார் சாலை பலப்படுத்தும் பணி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், வாழவந்திகோம்பை ஊராட்சி, காரவள்ளி பேருந்து நிலையத்தில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு மணி நேரத்தில் 1,000 லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட குடிநீர் நிலையம் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.20.30 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்