Hot Posts

6/recent/ticker-posts

மாணவர்களாகிய நீங்கள் பெறுவது கடன் இல்லை, இது அரசு மேற்கொள்ளும் முதலீடு”

மாணவர்களாகிய நீங்கள் பெறுவது கடன் இல்லை, இது அரசு மேற்கொள்ளும் முதலீடு” 
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் 172 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.96 கோடி கல்வி கடனுதவி வழங்கி பேச்சு.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், ஞானமணி கல்வி நிறுவனத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், இன்று (15.02.2024) பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 172 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12.96 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் பசியை போக்கிட காலை உணவுத்திட்டம், பெண்கள் உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். 

நாமக்கல் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் இந்த கல்வி ஆண்டு 2,383 நபர்களுக்கு ரூ.38.00 கோடி கல்வி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 
டிசம்பர் மாதம் வரை 1,694 நபர்களுக்கு ரூ.61.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 172 நபர்களுக்கு ரூ.12.96 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இந்த கல்வி ஆண்டில் 1,866 நபர்களுக்கு ரூ.74.61 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி கடன் பெறும் மாணவ, மாணவியர்கள் அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு, நன்கு படித்து வேலைவாய்ப்பு பெற்று தங்கள் பெற்றோருக்கும், கல்லூரிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். அரசின் தீவிர முயற்சியினால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி கடன் என்பது மாணவ, மாணவியர்கள் பெறும் கடன் அல்ல அது அரசு மேற்கொள்ளும் ஒரு முதலீடு ஆகும். நீங்கள் பெறும் கல்வி கடனை வேலைக்கு சென்றவுடன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி செலுத்திட வேண்டும். நீங்கள் திரும்பி செலுத்தும் கடன் மற்றொரு மாணவரின் கல்விக்கு நீங்கள் செய்திடும் உதவி ஆகும். மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கடன் என்பது வங்கிகள் பொதுமக்களின் வைப்பு நிதியிலிருந்து தான் வழங்குகிறார்கள். எனவே, நீங்கள் உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால் தான் வங்கிகள் வைப்பு நிதியை சரிசெய்திட முடியும். இன்றைய தினம் இந்தியன் வங்கி சார்பில் 64 நபர்களுக்கு ரூ.2.76 கோடி, கனரா வங்கி மூலம் 56 நபர்களுக்கு ரூ.6.50 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் 13 நபர்களுக்கு ரூ.1.20 கோடி, யூனியன் வங்கி சார்பில் 15 நபர்களுக்கு ரூ.53.00 இலட்சம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் 14 நபர்களுக்கு ரூ.1.65 கோடி, பேங்க் ஆப் பரோடா சார்பில் 8 நபர்களுக்கு ரூ.24.00 இலட்சம், கரூர் வைசியா வங்கி சார்பில் 2 நபர்களுக்கு ரூ.80,000/- என மொத்தம் 172 நபர்களுக்கு ரூ.12.96 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் கல்வி கடனை முறையாக பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.ஆர்.ராம்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.அ.ராஜாத்தி, பாச்சல் ஊராட்சி தலைவர் திரு.செ.சண்முகம், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருப்பூர் திரு.கொ.ஸ்ரீ.நிவாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.க.முருகன், ஞானமணி கல்வி நிறுவன தலைவர் முனைவர்.தி.அரங்கண்ணல், ஞானமணி தொழில்நுட்ப கல்லூரி கல்வி கடன் முகாம் ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வராஜ் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்