நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (08.02.2024) வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் முன்னிலையில் மின்னணு திரை சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் நிகழ்வுகள், செயல்பாடுகள் குறித்த காணொளி மற்றும் புகைப்பட தொகுப்புக்கள் மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்த செய்தி மக்கள் தொடர்பு துறையின் குறும்படங்கள் மின்னணு திரையில் திரையிடப்படும். மகளிர் தொழில் முனைவோருக்கு அரசு சான்றிதழ் பெறுதல், பதிவு, இணைய மற்றும் நேரடி விற்பனை வாய்ப்பு, சந்தைப் படுத்துதல், உள்நாடு, வெளிநாடு வர்த்தகம், பிராண்டிங், பேக்கேஜ் போன்ற உதவிகள் வழங்கப்படும்.
மேலும் 09.02.2024, 12.02.2024 மற்றும் 13.02.2024 (வெள்ளி, திங்கள், செவ்வாய்க் கிழமைகளில்) வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் தொழில் முனைவோர் கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம் குறித்த விபரங்களை 04286 290730 எண்ணிற்கு தொடர்பு கொண்டும், உடனடி பதிவுக்கு https://bit.ly/3UL70nF இணையவும் அல்லது QR Code மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மகளிர் தொழில்முனைவோர் தங்களது தகவல்களை இந்த இணைப்பை பயன்படுத்தி இணையதளம் மூலமாக விண்ணப்பித்த அனைவரும் வரும் 09.02.2024, 10.02.2024 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
0 கருத்துகள்