இராசிபுரம்;பிப்,1-
மங்களபுரத்தில் மறைந்த மாநில வன்னியர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டியார் ஜெ.குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..
தொடர்ந்து இன்று 01.2.2024 இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் இவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது..இதனை அடுத்து நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் காடுவெட்டி குரு அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது...
இந்த நிகழ்ச்சியில் பாமக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மங்களபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பொன்.முருகேசன் தலைமை வகித்தார்.பாமக நாமகிரிப்பேட்டைமத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என் ஆர்.நாகராசன், ஊராட்சி மன்ற துணை தலைவர் பி.ஆர். எஸ் ராஜசேகரன்,மேலும் பாமக இளைஞர் அணி மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட்டது.
0 கருத்துகள்