Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறுவனுக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறுவனுக்கு உடனடியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 547 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்களிடம் பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, கொல்லிமலை, சித்தூர்நாடு பகுதியை சேர்ந்த திரு.செல்லதுரை அவர்களது மகன் ரனிஷ் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்ககோரி பெறப்பட்ட மனுவின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். தொடர்ந்து, கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 
2 நபர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவித்தொகையாக தலா ரூ.50,000/- வீதம் 
ரூ.1.00 இலட்சத்திற்கான வங்கி காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.750/- மதிப்பிலான கைதாங்கியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.எம்.சிவக்குமார், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்