துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்த ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள்
தலைமையில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.02.2024) இராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில், இராசிபுரம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொண்ட கள ஆய்வு தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மின்சாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் இன்று காலை 9.00 மணி முதல் இராசிபுரம் வட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் / சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் அரசின் சேவைகள், நலத்திட்டங்கள், தங்குதடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையிலும், நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு தற்பொது நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இராசிபுரம் வட்டத்தில் இன்று காலை 9.00 மணி முதல் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வின் மூலம் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்குதல், திட்டங்களை விரைவுப்படுத்துதல் குறித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து விரைந்து தீர்வு காண வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.க.இராஜாங்கம் இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சு.வடிவேல், இணைபதிவாளர், (கூட்டுறவு சங்கங்கள்) திரு.க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.த.முத்துராமலிங்கம், தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.ச.பிரபாகரன், இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) மரு.ராஜ்மோகன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.க.பூங்கொடி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.நடராஜன், இராசிபுரம் நகராட்சி ஆணையாளர் திரு.இரா.சேகர், நெடுஞ்சாலைகள் துறை கோட்டப்பொறியாளர் திரு.திருகுணா, இணை இயக்குநர் வேளாண்மைத்துறை திரு.எஸ்.துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை திரு.கே.கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ச.பாலாகிருஷ்ணன், இராசிபுரம் வட்டாட்சியர் திரு.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி பி.மலர்விழி, திரு.கே.அருளப்பன் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்