Hot Posts

6/recent/ticker-posts

சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா

இராசிபுரம்;பிப்,9-

சிங்கிலியன் கோம்பை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்குட்பட்ட திம்ம நாயக்கன்பட்டி அடுத்து சிங்கிலியன் கோம்பை உள்ளது .இங்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணைக்கிணங்க இன்று வெள்ளிக்கிழமைகிழமை பள்ளிஆண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் வள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) எஸ்.ரவி தலைமை வகித்தார். தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ. முருகேசன் முன்னிலை வகித்தார்.மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.ஏ.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மஞ்சுளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. 
இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டியில் முதலிடம் இரண்டாம் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும் வழங்கி பாராட்டப்பட்டது.
இதை தொடர்ந்து பள்ளி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை 300 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்