Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு.

 நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயிலில் இன்று (20.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஸ் கண்ணன் இ.கா.ப., முன்னிலையில் அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பக்தர்கள் வரிசையாக சென்று வரும் வகையில் கோயில் பகுதிகளில், பேரிகார்டு அமைத்து தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது,

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருள்மிகு எட்டுக்கை அம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 21.02.2024 அன்று நடைபெறவுள்ளது. திருவிழாவின்போது பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.


இத்திருக்கோயில் நிர்வாகம் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான எண்ணிக்கையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவேண்டும். விழா நாளன்றும் திருக்கோயில் சன்னதிகளில் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விழா நாளுக்கு முன்பும், விழா நாளன்றும் திருக்கோயில் வெளிப்புறங்கள் மற்றும் திருக்கோயில் வளாகங்களில் சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதி செய்திட வேண்டும். சுகாதார துறையினர் பக்தர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை, திருக்கோயில்களின் முன் 108 ஆன்புலன்ஸ் சேவை மற்றும் முதலுதவி வசதிகள் போதிய அளவு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

 பொதுப்பணித்துறையினர் பந்தல் மற்றும் இதர கட்டுமான பணிகள் குறித்த உறுதி தன்மையை உறுதிப்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, திருக்கோயிலில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைவிடம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் திரு.சுவாமிநாதன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம், நாமக்கல் வட்டாட்சியர் திரு.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்