Hot Posts

6/recent/ticker-posts

ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிப்பதை கண்டித்து நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிப்பதை கண்டித்து நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்


நாமக்கல் 
பிப்ரவரி 8




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ,நாமக்கல் பூங்கா சாலையில்
ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதையும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்தும். ஈடி.ஐடி போன்ற ஒன்றிய புலனாய் அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை பழி வாங்குவதை கைவிட வலியுறுத்தியும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், உள்ள ஆளுநர்களின் அம்மாநில அரசுகளுக்கு எதிரான அத்து மீறல்களை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
 திமுக எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, மல்லசமுத்திரம் திமுக ஒன்றிய செயலாளர் பழனிவேலு, பரமத்தி திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ்,
 பரமத்தி பேரூர் திமுக செயலாளர் ரமேஷ், திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி,திமுக மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணி, பள்ளிபாளையம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ,
 வடக்கு ஒன்றியம் ஞானசேகரன்,
 காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் 
சித்திக்,
 ஓ.பி.சி அணி மாநில துணைத்தலைவர் டாக்டர் செந்தில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன்,
 கே.தங்கமணி பி.ஜெயமணி, எஸ்.சுரேஷ், ஏ.டி.கண்ணன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் கே.சின்னசாமி, நாமக்கல் பிரதேச செயலாளர் இ.எம். ராஜேந்திரன், எலச்சிபாளையம் சிபிஎம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவராஜ், சரவணன்,
மதிமுக மாவட்ட செயலாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பழனிச்சாமி, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பவுன்ராஜ் ,
மதிமுக நகர செயலாளர் வைகோ பாலு, 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, நாமக்கல் நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சிவகுமார், விடுதலைச் சிறுத்தைகள் மத்திய மாவட்ட செயலாளர் நீல வானத்து நிலவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் மணிமாறன், தி.க மாவட்ட தலைவர் பெரியசாமி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமதுல்லா, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்