*நாமக்கல் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் நிலையங்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வந்தே பாரத் ரயிலை இவ் வழியாக இயக்க தெற்கு ரயில்வே எடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், நாமக்கல்லில் நடைபெற்ற பிரதம மந்திரியின் அம்ரித் பாரத் ரயில் நிலைய காணொளி நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு, பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்*.
நாமக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நிலையத் திட்டத்தின்கீழ் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக நாடு முழுவதும் 544 ரயில் நிலையங்களை 41,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கும் மறு சீரமைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் காணொளி காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம், தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்த, அம்ரித் ரயில் நிலைய காணொளி காட்சியை பார்வையிட்டனர்.
முன்னதாக அம்ரித் ரயில் திட்டத்தின் கீழ் பல்வேறு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் இவவிழாவில் பரிசுகள் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் சிறந்த முறையில் கலை நிகழ்ச்சிகள் நடத்திய பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் கடந்த 1982 -ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் நாமக்கல் வழியிலான சேலம்-கரூர் ரயில் பாதை அமைப்பதற்கு கோரிக்கை மனு அளித்து அந்த திட்டம் நிறைவேறுவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தேன்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களால் 10 ஆண்டுகளுக்கு முன்பு 10-வது இடத்திலிருந்து நமது நாடு இப்பொழுது பொருளாதார அளவில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. உலக அளவில் இந்திய ரயில்வே துறை முதல் தரமான சேவைகளை வழங்கும் துறையாக வளர்ந்துள்ளது.
நமது மாநிலத்திற்கு மட்டும் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று 544 ரயில் நிலையங்கள் 41 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரதமர் வழங்கி உள்ளார். இதனை நாமக்கல் உள்ளிட்ட அனைத்து பகுதி பொதுமக்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
வளர்ந்து வரும் நாமக்கல் நகருக்கு இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் முழு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் டாக்டர் கே.பி. ராமலிங்கம் பேசினார்.
0 கருத்துகள்