Hot Posts

6/recent/ticker-posts

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 
தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, உழவர் சந்தையில் இன்று (10.02.2024) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக சுற்றுச் சூழல் பாதுகாப்பினை கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு தமிழ்நாடு எங்கும் வெகு விமர்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம் “Manjappai Vending Machine” திருச்செங்கோடு நகராட்சி, உழவர் சந்தையில் 133 பைகள் கொள்ளளவு கொண்ட மஞ்சப்பை வெண்டிங் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் 1 பத்து ரூபாய் நாணயம், இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் செலுத்தியும் மற்றும் க்யூஆர் கோடு (Unified payment Interface) முறையினை பயன்படுத்தியும் மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம். 
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் க.சுமித்ராபாய் (நாமக்கல்), கி.மணிவண்ணன் (குமாரபாளையம்), உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்