தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையில் மாணவ, மாணவியர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கல்வி கற்கும் சூழ்நிலையை உருவாக்கி அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் அரசு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்படி, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (23.02.2024) பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ”பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” முகாமை
தொடங்கி வைத்தார்கள்.
பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க, நிரந்தர ஆதார் மையத்திற்கு பயணிக்க வேண்டிய நிலையினை தவிர்த்து தாம் பயிலும் பள்ளியிலேயே எல்காட் (ELCOT)-ன் அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற அரசு திட்டத்தினை தொடங்கி வைத்துள்ளது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன் அவர்கள் நாமக்கல் நகராட்சி, கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் ”பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” முகாமினை தொடங்கி வைத்தார்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1,16,826 மாணவ, மாணவியர்களில் ஆதார் எண் இல்லாத 4,483 மாணவ, மாணவியர்களுக்கு ஆதார் எடுக்கவும் மற்றும் புதுப்பித்தல் தேவையுள்ள மாணவ, மாணவியர்களுக்கு புதுப்பித்தல் மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்முகாமில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் (பொ) திரு.த.முத்துராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ப.மகேஸ்வரி, துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்