Hot Posts

6/recent/ticker-posts

கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்..

எல். தரணிபாபு நாமக்கல் மாவட்டம்


கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்..

கர்நாடகா அரசு 16.2.2024 இன்று இந்த ஆண்டிற்கு உண்டான நிதிநிலை அறிக்கையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு கர்நாடகா அரசு அறிவித்தற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

 கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி அணையை உடைத்து தகர்துவோம் பண்டைய ராஜாக்கள் காலங்களில் போர் நடந்ததைப்போல்  தமிழக விவசாயிகள் யுத்ததிற்கும் தயாராக உள்ளோம் என கர்நாடகா அரசை எச்சரிக்கிறேன். தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ஆர்.வேலுசாமி
அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்