நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (01.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் விவாசயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 724.06 மி.மீ. தற்போது வரை (31.01.2024) 10.69 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முடிய இயல்பு மழையளவை விட 0.24 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை நெல் 4,804 எக்டர், சிறுதானியங்கள் 78,024 எக்டர், பயறு வகைகள் 8,231 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 32,058 எக்டர், பருத்தி 2,715 எக்டர் மற்றும் கரும்பு 9,613 எக்டர் என மொத்தம் 1,34,346 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 575 எக்டர், கத்திரி 425 எக்டர், வெண்டை 314 எக்டர், மிளகாய் 296 எக்டர், மரவள்ளி 7,586 எக்டர், வெங்காயம் 4,142 எக்டர், மஞ்சள் 1,806 எக்டர் மற்றும் வாழை 2,509 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா 5,262 மெ.டன், டிஏபி 1,263 மெ.டன், முரேட் ஆப் பொட்டாஷ் 1,263 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 391.35 மெ.டன், காம்ப்ளக்ஸ் 3,328 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கு சிறப்பு பருவத்தில் நெல் (சம்பா) மற்றும் சின்ன வெங்காயம் பயிர்களுக்கும் இரபி பருவத்தில் சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி கரும்பு, மரவள்ளி, வாழை மற்றும் தக்காளி பயிர்களுக்கும் FEATURE GENERALI நிறுவனம் மூலம் காப்பீடு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திட அனுமதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு தலா ரூ.584.44 –ஐ 15.03.2024-ம் தேதி வரையிலும் மற்றும் கரும்பு பயிருக்கு ரூ.2,914.60–ஐ ரூ.30.03.2024 ஆம் தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.
மேலும், தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1857.44-ஐ ரூ.29.02.2024 ஆம் தேதி வரையிலும் மற்றும் மரவள்ளி பயிருக்கு பிரிமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.1,548.70-ஐ 29.02.2024 ஆம் தேதி வரையிலும் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் மேற்கண்ட பயிர்களுக்கு உரிய பிரிமியத் தொகையை கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் IFSC Code எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.
இன்றைய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆப.இ, அவர்களிடம் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் திரு.கா.இராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.அருளரசு, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி க.ரா.மல்லிகா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.மா.க.சரவணன் (நாமக்கல்), திருமதி சே.சுகந்தி (திருசெங்கோடு), வேளாண்மை இணை இயக்குநர் திரு.சு.துரைசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.ப.முருகேசன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் திரு.கி.கணேசன், வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம்) திரு.நாசர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ)
திரு.க.இராமச்சந்திரன் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்