சேலம் மண்டல தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான
மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (21.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சேலம் மண்டல தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் (பயிற்சி பிரிவின்) சேலம் மண்டலத்தில் நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 11 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 21 தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 519-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ளும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான மண்டல அளவிலான கைபந்து, கால்பந்து, இறகுபந்து, 100மீ, 200மீ, 400 மீ மற்றும் 800 மீ ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 13 விளையாட்டு போட்டிகளும், பெண்கள் பிரிவில் 9 விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக இப்போட்டிகள் அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களிலேயே நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் திரு.எஸ்.ராஜகோபாலன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக இணை இயக்குநர் திரு.பி.பார்த்திபன், நாமக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.எஸ்.வி.ஈஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எஸ்.கோகிலா துறைசார்ந்த அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்