பள்ளிபாளையத்தில் வருங்கால முதல்வர் என ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு
பள்ளிபாளையம் பிப்ரவரி-8
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் , சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த அறிவிப்பு நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களுக்கும், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினருக்கும் உற்சாகம் அளித்த நிலையில், அதை கொண்டாடும் வகையில் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல் ,இலவச வேட்டி சேலை வழங்கல் என பல்வேறு வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட வர்த்தக அணி தலைமை சார்பில், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ,நடிகர் விஜயை வருங்கால முதல்வர் என வாழ்த்தும் வகையில் சுவரொட்டிகள் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கட்சி பெயரை அறிவித்த சில தினங்களிலே வருங்கால முதல்வர் என சுவரொட்டி ஒட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளை ஏற்படுத்தி உள்ளது ..
0 கருத்துகள்