வழங்கி பெருமிதம்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி சாலை, ஜஸ்வர்யா மஹாலில் இன்று (08.02.2024) மகளிர் திட்டம் சார்பில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா., இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 939 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 11,592 மகளிருக்கு (உறுப்பினர்கள்) ரூ.68.37 கோடி வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் பேசியதாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம், அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் பசியை போக்கிட காலை உணவுத்திட்டம், ஒரு பெண் படித்து முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்பதை கருத்தில் கொண்டு பெண்கள் உயர்கல்வி பயில ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். புதுமை பெண் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 15,725 மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றார்கள். உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி செயல்படுத்தி உள்ளார்கள்.
மேலும், கொரோனா காலத்தில் ரூ.4,000 நிவாரண நிதி உதவி, விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதன்முதலில் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவை தொடங்கி வைத்தார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம், எரிவாயு சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள்.
மேலும், பெண்கள் சுய தொழில் தொடங்கிட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில், 939 குழுக்களை சேர்ந்த 11,592 நபர்களுக்கு ரூ.68.37 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்திடும் பொருட்களை விற்பனை செய்திட வாகனம் வழங்கப்படவுள்ளது. அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி கொண்டு பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 536 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 5,976 மகளிருக்கு ரூ.46.63 கோடி கடனுதவி, தமிழ்நாடு மாநில நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் 402 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 4,588 மகளிருக்கு ரூ.20.72 கோடி கடனுதவி, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 1 சுய உதவிக்குழுவை சேர்ந்த 1,028 மகளிருக்கு ரூ.1.02 கோடி கடனுதவி என மொத்தம் 939 சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 11,592 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.68.37 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் திரு.து.கலாநிதி, துணைத்தலைவர் திரு.செ.பூபதி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட இயக்குநர் திரு.கு.செல்வராசு, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் திரு.க.பா.அருளரசு, மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் திரு.முருகன், நகர்மன்ற உறுப்பினர் திரு.சிவக்குமார், அட்மா குழுத்தலைவர் திரு.அசோக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்