எல். தரணிபாபு ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு PACL முதலீட்டாளர்கள், களப்பணியார்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு PACL முதலீட்டாளர்கள், களப்பணியார்கள் சங்கம் சார்பில்,
பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, இன்று முதல் வரும் 14ம் தேதி வரை என ஒரு வாரக் காலம் மாநிலம் தழுவிய கோரிக்கை மனு அளிக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முருகேசன் தலைமை வகித்தார்; ஜோதி முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், PACL நிறுவன முதலீட்டாளர்களுக்கு நிபந்தனையின்றி முதிர்வு தொகையை உடனே வழங்க வேண்டும்,
மண்டல அளவில் அலுவலகம் திறக்க வேண்டும்,
கடந்த 2019ல் மும்பை செபி அலுவலகத்தில் R.M.லோதா கமிட்டி உறுப்பினர் நீதியரசர் மகாலிங்கம் அவரிடம் கொடுத்த மனு
மற்றும் 2023 மும்பை செபி அலுவலகத்தில் நோடல் ஆபீஸரிடம் கொடுத்த கோரிக்கை மனுவுக்கு தீர்வு வழங்கிட கோரி,
ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
0 கருத்துகள்