ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையத்தின் சார்பில் மாநில அளவில் யோகாசனம் போட்டி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையத்தின் சார்பில், இராசிபுரம் எஸ் ஆர் வி எக்ஸெல் மேல் நிலைப்பள்ளியில் மாநில அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது.
இதில் நாமக்கல், சேலம், கரூர், மதுரை, ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து 460-, க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
போட்டியை இராசிபுரம் எஸ் ஆர் வி எக்ஸெல் மேல் நிலைப் பள்ளியின் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீஆஸ்ரம் யோகா மையத்தின் தலைவர் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
மாணவர்களுக்கு வயது பிரிவின் அடிப்படையில் முன்வளைதல் பின்வளைதல், சமநிலைப்படுத்துதல், திருகுநிலை ஆகிய யோகாசன பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியை நடுவர்கள் சரவணன், கிருஷ்ணன், மாணிக்கம், பிரபு, பன்னீர், வெங்கடாசலம், ராஜகுமாரி, தனலட்சுமி, கோகிலா ஆகியோர் நடத்தினர்.
இதில் பயிற்சியாளர் ராஜகுமாரி-யின் தலைமையில் சேலம் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
ஸ்ரீ ஆஸ்ரம் யோகா மையத்தின் தலைவர் எஸ்.சந்திரசேகர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஸ்ரீஆஸ்ரம் யோகா மையத்தின் நிறுவனர் இராசிபுரம் சரவணன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் இந்த யோகாசனப் போட்டி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்