பள்ளிபாளையம் பிப்ரவரி 15
பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில், மாற்று கட்சியில் இருந்து விலகி 100 பேர் தேமுதிகவில் இணையும் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் காடச்சநல்லூர் பகுதியில் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 100 பேர் , தேமுதிக மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் தங்களைக் கட்சியில் இணைத்து கொண்டனர்.
கட்சி நிர்வாகி சக்திவேல் வரவேற்று பேசினார். பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் மணியண்ணண், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் தனலட்சுமி, குமாரபாளையம் மாவட்ட நிர்வாகி நாகராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சுரேஷ், பள்ளிபாளையம் நகர கழக செயலாளர் வெள்ளியங்கிரி, மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் சேகர், மாவட்ட தொழிற்சங்கம் சம்பத் ,பேச்சாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைத்துக் கொண்ட அனைவருக்கும் சால்வை அணிவித்தும் தேமுதிக உறுப்பினர் படிவம் வழங்கி மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் சிறப்புரையாற்றினார்.
ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
0 கருத்துகள்