Hot Posts

6/recent/ticker-posts

உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.

உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.02.2024 அன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ”உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மனு வழங்கிய 2 பயனாளிகளுக்கு புதியதாக வீடு கட்டுவதற்கு அரசு மானியத் தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1 மாற்றுத்திறனாளிக்கு இலவச தையல் இயந்திரத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23-11-2023 அன்று அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில், ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்கள். 
அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் 
ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 21.02.2024 அன்று நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டாத்திற்குட்பட்ட பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த திருமதி பத்ருன் மற்றும் திருமதி சுமையா பேகம் ஆகிய 2 நபர்கள் வீடு கட்ட அரசு மானியம் வேண்டியும், 1 மாற்றுத்திறனாளி இலவச தையல் இயந்திரம் வேண்டியும் விண்ணப்பம் அளித்தார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 400 சதுர அடிக்கு மிகாமல் புதியதாக கான்கீரிட் தளம் அமைத்து வீடு கட்ட, கட்டடம் அமைக்கப்பட்ட பின்பு (Basement Level) ரூ.50,000/-, கட்டடம் லிண்டல் அமைக்கப்பட்ட பின்பு (Lintal Level), ரூ.50,000/-, கான்கீரிட் தளம் அமைக்கப்பட்ட பின்பு (Roof Level) ரூ.50,000/-, கட்டடத்தின் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட பின்பு ரூ.60,000/- என மொத்தம் ரூ.2,10,000/- இலட்சம் அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. 
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் 
ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடு கட்ட அரசு மானியம் வேண்டி விண்ணப்பித்த நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த 
திருமதி சௌ.பத்ருன் மற்றும் திருமதி சுமையா பேகம் ஆகிய 2 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அரசு மானியமாக தலா ரூ.1,50,000/- வீதம் ரூ.3,00,000/-க்கான தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மேலும், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இராசிபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி திருமதி சகுந்தலா இலவச தையல் இயந்திரத்தினை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் வழங்கினார். 
புதியதாக வீடு கட்டுவதற்கு அரசு மானியத் தொகையினை பெற்ற பயனாளி 
திருமதி சௌ.பத்ருன் அவர்கள் தெரிவித்ததாவது:



1.திருமதி சௌ.பத்ருன் அவர்கள்

எனது பெயர் பத்ருன், எனது கணவர் பெயர் சௌகார். எனது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். மகன் தனியார் மில்லில் வேலைக்கு சென்று வருகிறான். மகள் அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். நாங்கள் வெண்ணந்தூர் பகுதியில் வசித்து வருகிறோம். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடு கட்ட அரசு மானியம் வழங்குவதாக தெரிவித்தார்கள். மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இராசிபுரம் பகுதியில் உங்களை தேடி உங்களை ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட போது எங்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வேண்டும் என விண்ணப்பம் அளித்திருந்தேன். தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு கட்டுவதற்கு அரசு மானியமாக மூன்று தவணைகளாக வழங்க வேண்டிய ரூ.1,50,000/- தொகையினை ஒரே தவணையாக வழங்கியுள்ளார்கள். எங்களுக்கு வீடு கட்ட அரசு மானியம் வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எனது சார்பாகவும் எங்களது குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

புதியதாக வீடு கட்டுவதற்கு அரசு மானியத் தொகையினை பெற்ற பயனாளி 
திருமதி இ.சுமையா பேகம் அவர்கள் தெரிவித்ததாவது:


2.திருமதி இ.சுமையா பேகம் அவர்கள்
எனது பெயர் சுமையா பேகம், எனது கணவர் பெயர் இலியாஸ். ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நான் எங்களது 4 மற்றும் 2 வயதில் உள்ள இரண்டு ஆண் குழந்தைகளை கவனித்து வருகிறேன். நாங்கள் குடும்பத்துடன் வெண்ணந்தூர் பகுதியில் வசித்து வருகிறோம். ஒரு சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது வீடு கட்ட அரசு மானியம் வேண்டி விண்ணப்பம் அளித்தேன். நான் மனு அளித்த ஒரு சில தினங்களுக்குள் அரசு மானியம் வழங்குவதாக கைபேசியில் அழைத்து தெரிவித்தார்கள். இதனை கேட்டவுடன் மகிழ்ச்சியில் எனது உறவினர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வழங்கவுள்ளார்கள் என தெரிவித்தேன். வீடு கட்டுவதற்கு அரசு மானியம் வேண்டி விண்ணப்பம் அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு கட்டுவதற்கு ரூ.50,000/- வீதம் ரூ.1,50,000/- ஆக வழங்க வேண்டிய 3 தவணை தொகையினை ஒரே தவணையாக வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

இலவச தையல் இயந்திரம் பெற்ற மாற்றுத்திறனாளி 
திருமதி சகுந்தலா அவர்கள் தெரிவித்ததாவது :


                                3.திருமதி சகுந்தலா அவர்கள்

எனது பெயர் சகுந்தலா, நான் இராசிபுரத்தில் வசித்து வருகிறேன். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இராசிபுரம் வட்டாரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தேன். எனது விண்ணப்பத்தின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தற்போது எனக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கியுள்ளார்கள். இந்த இலவச தையல் இயந்திரத்தின் மூலம் தையல் தொழில் செய்து எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு, பராமரிப்பு உதவித் தொகை ரூ.2,000/- ஆக உயர்த்தியும், தொழில் தொடங்க கடனுதவி, அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ பரிசோதனை, அடையாள அட்டை, ஆதார் அட்டை, பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஊன்றுகோல், காதொலிக்கருவி, இலவச பேருந்து பயணச் சலுகை, கல்வி உதவித் தொகை திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், செயல்படுத்தியும் வருகின்றார்கள். இதுபோன்ற திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது சார்பாகவும், மாற்றுத்திறனாளிகளின் சார்பாகவும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்