வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு.
நாமக்கல் வட்டத்திற்குட்பட்ட தளிகை, வள்ளிபுரம், கல்யாணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (15.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் வட்டம், தளிகை, வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மருத்துவ கல்லூரியில் விடுதி கட்டும் பணி, அவல்நாய்க்கன்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரையான்புதூர் சாலை மேம்பாட்டு பணி, கல்யாணி ஊராட்சியில் நில மாறுதல் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்