Hot Posts

6/recent/ticker-posts

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் சாலை விபத்தில் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் 
சாலை விபத்தில் காயமடைந்தவரை உடனடியாக மீட்டு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி பகுதியை சேர்ந்த 
திரு.ரவி (வயது 45) என்பவர் தனது உறவினரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, சிங்களாந்தபுரம் மயானத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது போடிநாயக்கன்பட்டி ஓணான் கரடு பகுதியில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் விபத்திற்குள்ளனார். அச்சமயம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இராசிபுரம் வட்டத்தில் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொள்ள அவ்வழியாக சென்ற பொழுது விபத்தில் பாதிக்கப்பட்டு காயமடைந்த மேற்கண்ட நபரை மீட்டு உடனடியாக இராசிபுரம் வட்டாட்சியர் அவர்களின் அரசு வாகனத்தில் இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும், அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் வரும் நபருக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இராசிபுரம் அரசு மருத்துவமனையில் விபத்திற்குள்ளான நபருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதோடு, தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை மருத்துவமனைக்கே சென்று பார்வையிட்டு, விபத்திற்குள்ளான திரு.ரவி அவர்களுக்கு தேவையான முதலிதவி சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளார் என்பதை உறுதி செய்த பின்னர் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.

விபத்து ஏற்பட்ட 15 நிமிடத்தில் காயமடைந்த நபருக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்களின் உதவியால் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்