இராசிபுரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், காக்காவேரி, ஆயில்பட்டி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி மற்றும் சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திகோம்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (09.02.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இராசிபுரம் வட்டம், காக்காவேரி, ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைபடுத்தப்பட்ட விபரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் 2021-22-ன் கீழ் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திகோம்பை, காரவள்ளி பேருந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0 கருத்துகள்